முதல் அழுகை…
திங்கற் சுழற்சியில்
விடுபட்டு
தலைசுற்றிச் சரிந்து
முலைகளில் முள்குத்தும்
உணர்வை உள்ளுணர்ந்து
உண்ணலின் முன்னும்
பின்னும்
ஒவ்வாது கக்கி
அடிவயிறு புடைக்கப்
பனிக்குடத்தில் சுமந்து
எனக்குப் பகிர்ந்தளிக்க
உனக்கென எடுக்கும்
அனைத்தையும் ஆய்ந்து
ஈரைந்து திங்கள்
அனற்மேல் புழுவாய்த்
துடித்து
எலும்புகள் நொருங்குதற்கு
இணையான வலி பொறுத்து
ஈன்றெடுத்து ஓய்கையிலும்
உன் நலம் காணாது
எனை மட்டும் பாலினம்
கேட்கும்
மாக்களின் உணர்வுகளைப்
புறந்தள்ளி
ஆவலோடு அள்ளியெடுத்து
உன் குருதியைப்
பாலாக்கி ஊட்டினாய்
அறிந்தோ அறியாமலோ
உனக்காய்த் தொடங்கியது
என் முதல் அழுகை…
ச.க.இரமேசு எழில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக