துளிப்பாக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
துளிப்பாக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 14 டிசம்பர், 2015

புல்லாங்குழல் விரும்பாத ராதை
பறையடிக்கக் கற்கும் கண்ணன்
மாந்தவியல் முன்னேற்றம்

---------------------- எழில் (ச.க.இரமேசு)
தாளில் வரைந்த பட்டாம்பூச்சி
பறக்காது என்பதைப் பொய்யாக்கும் மகள்
சுழல விடுகிறாள் மின்விசிறியை

----------------------------- ச.க.இரமேசு
பூக்கள் பறிக்கும் மாந்தர்
செடியின் முகவரி அறிய முனைகையில்
கைதட்டும் மலர்க் காடுகள்

------------------------ எழில் (ச.க.இரமேசு)
மறைந்து விட்டீர்கள் என்கிறார்கள்
துளித் துளிப்பாக்களில் என்றும் மறையாது
வாழ்கிறீர்கள் என்பது அறியாதவர்கள்

--------------------------------- எழில் (ச.க.இரமேசு)
புகைகிறது எம்மை எரித்த நெருப்பு
இன்னும் திணி எதையும் எம்மீது
உனக்கும் புரியும் நாளொன்று வரும்

----------------------- எழில் (ச.க.இரமேசு)
புள்ளி ஒன்றே தரப்பட்டிருக்கிறது
அதன் மேல் வளைவிட்டு வினாக்குறியாக்கி
நேர் கோடிட்டு வியப்புக்குறியாக்கி என
வேறுபடுகிறது வாழ்க்கை

---------------------- எழில் (ச.க.இரமேசு)
பெண்கள் நாள் ஆண்கள் நாள்
இன்னும் வரவேயில்லை மாந்தர் நாள்
உறுப்புகளில்லை உலகு உணர்

--------------------- எழில் (ச.க.இரமேசு)
நிறப்பிரிகைகளே வாழ்வியலான நேரத்திலும்
நிறமடித்துக் கொண்டிருக்கிறாள் மகள்
வெள்ளைத்தாளும் வானவில் ஆகிறது

------------------- எழில் (ச.க.இரமேசு)
தொலைக்காத ஒன்றைத் தேடித்
தொலைகிறேன் தொலைந்து போகாமலிருக்க
தொலைந்து தொலைக்கிறேன் தொலைவில்

----------------------- எழில் (ச.க.இரமேசு)
வீட்டுப்பாடம் எழுதிக் கொண்டிருந்தாய்
எனக்கு வாழ்க்கைப் பாடம் நடத்திக் கொண்டே
இடையிடையே புன்னகைக்க மறவா இதழ்களோடு

----------------------- எழில் (ச.க.இரமேசு)
எல்லோரும் ஓர் நிறை
கற்றுக் கொடுத்தது இங்கு
எல்லோருக்குமாய்ப் பெய்த மழை

--------------------- எழில் (ச.க.இரமேசு)
ஒட்டிய படங்களைக் கிழிக்கையில்
ஓட்டையானது உள்ளொட்டி
ஒன்றுக்குப் பதில் இரண்டாய் அணி
ஓங்கி ஒலி இது சென்னைடா

-------------------- எழில் (ச.க.இரமேசு)
எழமுடியாத என் சொற்களுக்குப்
பேசாமை எனப் பெயரிடாதே அது
போருக்கான ஒத்திகையாகவும் இருக்கலாம்

--------------------- எழில் (ச.க.இரமேசு)
பெருவேட்கையில் கடலைக் குடிக்க முனைகையில்
குத்திக் கிழிக்கின்றன மீனின் முட்கள்

புதன், 18 நவம்பர், 2015

என்னென்னெ கனவுகளோ

பொம்மையோடு மகள்

பச்சையமற்ற இலைகள்

நிறையாத வயிறு

செவ்வாய், 17 நவம்பர், 2015

ஈ.வே.ரா.

ஆய்வு